Mysterious Temples in India | இந்தியாவின் மர்மமான கோவில்கள்

 

வீரபத்ரா கோயில், ஆந்திரா: தொங்கும் தூண்இந்தியாவில் உள்ள மர்மமான கோயில்களின் பட்டியலில் இன்னொன்று வீரபத்ரா கோயில் ஆகும், இது 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலாகும்.

70 பெரிய தூண்களைக் கொண்டுள்ளது. இந்த கோயிலின் மனதைக் கவரும் பகுதி இந்த தூண்களில் ஒன்றாகும். அதாவது தூயங்கள் எதுவும் தரையை தொடாது. அது எப்படிடா தரையை தொடம தூண் நிக்கும் னு நீங்க நெனைப்பிங்க அனா உண்மையிலேயே இந்த தூண்கள்லாம் தொங்குகிட்டு இருக்கும், அதாவது அது தரையைத் தொடாம.

இதை பக்குரதுக்காவே இங்க பக்தர்கள் கூட்டம் அதிகமா வந்துகிட்டு இருக்கும்.

தேவ்ஜி மகாராஜ் மந்திர் - மத்திய பிரதேசம்

இது மத்திய பிரதேசத்தில இருக்குற ஒரு கோவில். ஒவ்வொரு மாசமும் பௌர்ணமியி அப்போ, பேய் மற்றும் தீய சக்திகளிலிருந்து தங்களை விடுவிக்க பக்தர்கள் வர இடம இது இருக்கு. 

பேய் மற்றும்  தீய ஆவிகளை  உடலை விட்டு வெளியேறறவும் பயமுறுத்துவதற்காகவும்  வெறும் உள்ளங்கையில் கற்பூர ஏத்துறது ஒரு பொதுவான நடைமுறையா இங்க கடைபிடிக்கப்படுது. அதை தவிர கோவிலை சுத்தி ஓட்றது, தொடப்பக்கட்டையால வெளு வெளுன்னு அடிச்சி நொறுக்குவது னு சில காரியங்களும் இங்க பன்றாங்க.


வெங்கடேஸ்வரர் கோயில் - ஆந்திரா 

உலகத்திலே அதிகமா நன்கொடை பணம் கொடுக்கற கோவில்னா அது இதுதான். நன்கொடைய விட வித்யாசமான விஷயத்தை பத்திதான் பக்க போறோம் வெங்கடேஸ்வரர் கோயில் விஷ்ணுவின் தங்குமிடமாகும், இது மனித முடியை தியாகத்தின் அடையாளமாக கருதப்படுது. 

 இந்தியாவின் மிக வரலாற்று கோயில்களில் ஒன்றான இந்த கோவிலில் முடிதிருத்தும் இரண்டு பெரிய மண்டபங்கள் உள்ளது, அவை தினமும் 12,000 க்கும் மேற்பட்ட பக்தர்களின் தலைமுடியை மொட்டையடித்து, ஆண்டுதோறும் 75 டன் முடியை மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்றங்க. 

இதன் மூலமா ஆண்டுக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக சம்பாதிக்கிறாங்க . 

இந்த முடியெல்லாம் இத்தாலில  விக் உற்பத்தி பண்றவங்களுக்கும், தலைமுடியிலிருக்கும் சாறுகளை உணவுப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தும் சீனர்களுக்கும் விற்கப்படுகின்றது.


மாகா காமக்யா தேவி - மாதவிடாய் தேவி

இந்த கோவில் அசாம் மாநிலத்தில இருக்குது. இந்தியாவில இருக்கிற கோவில்ல பிரபலமான கோயில்களில் இதுவும் ஒன்று. 

இந்த கோயிலில் வழிபட  எந்த ஒரு சிலையும் இல்லை, இருந்தாலும் அங்க ஒரு கல்லு இருக்கு , அதில் இருக்குறது சிவபெருமானின் மனைவி தேவி சதியின் யோனினு கூறப்படுத்து. அந்த யோனி ஒரு சிவப்பு பட்டு புடவையால் மூடப்பட்டிருக்கிது .

ஒவ்வொரு வருஷமும் பருவமழையின் போது கோவில் மூணு நாள் மூடப்படுது, ஏன் மூணு நாள் மூடப்படுத்துன அது தெய்வத்தின் மாதவிடாய் நாட்கள் னு கூறப்படுது.

நான்காம் நாள் தாந்த்ரீக கருவுறுதல் திருவிழா அல்லது அம்புபாச்சி மேளா இங்கு கொண்டாடப்படும் போது, கோயில் மீண்டும் திறக்கப்படுது.

இந்த கோயிலின் கருவறையில ஒரு நிலத்தடி நீர் பாயுது. அந்த நிலத்தடி நீரூற்று இந்த மூனு  நாட்கல்ள  சிவப்பாக மாறும் என்றும் சொல்லறாங்க. 

மாதவிடாய் நாட்களில் கல் யோனியை மறைக்கப் பயன்படுத்தப்படும் சிவப்புத் துணியின் ஒரு பகுதியை பக்தர்களுக்கு ‘பிரசாத்மாக ’ என்று வழங்கப்படுது.


கொடுங்கல்லூர் பகவதி கோயில் - கேரளா

கொடுங்கல்லூர் பகவதி கோயில் இது கேரளா ல இருக்கிற ஒரு கோவில். காளி தேவியின் மறுபிறவி  தங்குமிடம இந்த கோவில் சொல்லப்படுது.

இந்த கோயில்ல ஆண்டுதோறும் வினோதமான ஏழு நாள் திருவிழா கொண்டாடப்படுது அது பாரணி  விழானு சொல்லறாங்க. 

ஆண்களும் பெண்களும் சிவப்பு டிரஸ் போட்டுக்கிட்டு கயிலை வாள்களை ஏந்திகிட்டு  கோயிலில்ல  திரண்டு ஓடுவாங்கலாம். அந்த வாளால தலையில்ல அடிச்சிப்பாங்களாம், அப்படி அடிச்சிக்கும் பொது ரத்தம் வர்ற அளவுக்கு அடிச்சிப்பாங்களாம். 

ரத்ததோட அவங்க  கோயிள்ள  நுழைன்ஜி எல்லாத்தையும் அடிச்சி நொறுக்குவாங்கலாம் அது மட்டுமில்லாம தேவியைப் பற்றி மோசமான பாட்டுங்களையும் பாடுவாங்கலாம் .

இங்க பிரசாதங்கள் பொதுவா செய்றதில்ல அதுக்கு பதிலா தேவியின் சிலை மேல விசுவாங்கலாம்.

திருவிழா முடிஞ்ச 7 நாட்களுக்கு இந்த கோயில் மூடப்பட்டுதான் இருக்குமாம், ஏன்னா திருவிழா அப்போ ஏற்பட்ட  இரத்தக் கறைகளை சுத்தம் செய்யும் வேளை நடக்குமாம். 

இந்த திருவிழாவின் காரணமாதான், இது இப்போது கேரளாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்னா இருக்கு.


ஸ்தம்பேஸ்வர் மகாதேவ், குஜராத்: மறைந்துபோகும் மர்மம்

நாள் முழுவதும் தோன்றும் மற்றும் மறைந்துபோகும் ஒரு கோவிலுக்கு நீங்கள் வருவீர்களா? குஜராத்தில் வதோதராவுக்கு அருகில் அமைந்துள்ள ஸ்டம்பேஸ்வர் மகாதேவ் கோயில் அரேபிய கடலுடன் கரையை பகிர்ந்து கொள்ளும் இந்தியாவின் மிக மர்மமான கோயில்களில் ஒன்றாகும். சிவபெருமான் இங்கு வசிக்கிறார், அதில் துணிந்து செல்வோரை ஆசீர்வதிப்பார். இது குஜராத்திலும் இந்தியாவிலும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்றாகும்.

இந்த கோயிலின் ஒரே வித்தியாசமான விஷயம் என்னவென்றால், குறைந்த அலைகளின் மணிநேரங்களில் மட்டுமே இதைப் பார்க்க முடியும். பல மணிநேரங்களில், கோயில் கடலால் முழுமையாக மூழ்கடிக்கபட்டிருக்கும் , மேலும் தண்ணீர் இறங்கும்போது சில மணிநேரங்களுக்குப் பிறகு அது மீண்டும் தோன்றும்.


கல் பைரவ் நாத் கோயில், வாரணாசி: ஆல்கஹால் பிரசாதம்

புனித நகரமான வாரணாசியில், சிவபெருமானின் மறுபிறவியான கல் பைரவ் நாத்தின் தங்குமிடம் உள்ளது. நீங்க நம்புவீங்களானு தெரியல இங்கே கடவுளுக்கு வழங்கப்படும் ஒரே பிரசாதம் ஆல்கஹால் தான், அது விஸ்கி அல்லது வ்ய்ன் ஆகா இருந்தாலும் சரி. தெய்வத்தின் திறந்த வாயில் ஆல்கஹால் நேரடியாக ஊற்றப்படுகிறது, மேலும் பிரசாதம் போன்று பக்தர்களுக்கும் இது வழங்கப்படுகிறது. 

கோயில்களுக்கு வெளியே பூக்கள் மற்றும் இனிப்புகளை பிரசாதமாக விற்கும் கோவில்களுக்கு மத்தியில்  வாரணாசியில் உள்ள இந்த கோவிலின் வெளியில் ஸ்டால்களில் விற்பனைக்கு மதுவை மட்டுமே வழங்குகின்றனர்.


தேவரகட்டு கோயில், ஆந்திரா: லத்தி சடங்கு

இந்தியாவின் மற்றொரு பழங்கால கோவிலான ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள தேவரகட்டு கோயில் பானி விழாவிற்கு பிரபலமானது. கர்நாடகாவின் எல்லையில் அமைந்திருக்கும், ஒவ்வொரு ஆண்டும் தசரா அன்று, இரு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் நள்ளிரவு வரை ஒருவருக்கொருவர் தலையில் அடித்துக்கொள்வதற்காக, லத்திகளுடன் பெருமளவில் கூடுகிறார்கள்!

மாலா-மல்லேஸ்வரர் (சிவன்) ஒரு அரக்கனைக் கொன்றதை நினைவுகூரும் வகையில், இரத்தத்தில் நனைந்த இந்த மனிதர்கள் இரவு முழுவதும் கொண்டாட்டத்துடன் செல்கின்றனர். 100 ஆண்டுகள் பழமையான இந்த திருவிழா முன்பு லத்திகளுக்கு பதிலாக கோடரிகள் மற்றும் ஈட்டிகளால் கொண்டாடப்பட்டது. 

2014 ஆம் ஆண்டில், பானி பண்டிகையின்போது மொத்தம் 56 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தீவிர வெறிக்கு மருத்துவ உதவியாளர்களும் காவல்துறையினரும் பார்வையாளர்களாக இருக்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யமான விஷயமா இருக்கு.


Post a Comment

Thanks for Reading My Post :-)

Previous Post Next Post