கடந்த 2017 ஆம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சுகேஷ் சந்திர சேகர் என்கிற இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் சுமார் 2 மாதம் சிறையில் இருந்தார்.
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம்பெறாததையடுத்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு டெல்லி போலீசார் இந்த வழக்கின் விசாரணையில் பெரிதாக ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.
இந்த நிலையில் டெல்லியில் பெண் தொழிலதிபர் ஒருவரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் சுகேஷ்சந்திர சேகர் அமலாக்கத் துறையினரிடம் வசமாக சிக்கியுள்ளர் மற்றும் சுகேஷ் சந்திர சேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தது அமலாக்கத் துறையின் விசாரணையில் தெரிய வந்தது.